• Apr 20 2024

இத்தனை கோடி பெறுமதியில் வீடு வாங்கினாரா ராஷ்மிகா-யாரோடு தங்கப்போறார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கன்னடத்தில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவரை ரசிகர்கள் அனைவரும் National Crush என கொண்டாடும் அளவிற்கு தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.

இவர் தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதோடு அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகவும் திகழுகின்றார்.

அமிதாப் பச்சனுடன் குட் பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு, வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்தியில் மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அடிக்கடி மும்பை செல்லும் அவர் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி வந்தார்.

இந்த நிலையில் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 8 கோடி என்கிறார்கள். மூன்று அறைகள் கொண்ட இந்த வீட்டில் தனது அம்மாவுடன் ராஷ்மிகா தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார்.

அத்தோடு ராஷ்மிகாவுக்கு அவர் பிறந்த ஊரான கர்நாடக மாநிலம் கூர்க்கில் பிரமாண்ட பங்களா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் மற்றும் சென்னையிலும் வீடு வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement