• Apr 26 2024

ஷோலோ ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷை தேர்ந்தெடுத்த சூரரைப் போற்று திரைப்பட இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ரித்திகா நடிப்பில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் சுதா கொங்கரா. குத்துச் சண்டையை மையப்படுத்தி உருவான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தாலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இப்படத்திற்கு 5 தேசிய விருதுகளும் கிடைக்கப்ப பெற்றன. இதனால் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்குகிறார். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.இதற்கு முன்னதாக, ஒரு பெண்ணை மையப் படுத்தி புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம் சுதா கொங்கரா. அதில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அணுகப்பட்டுள்ளாராம்.

முன்னதாக ஏப்ரல் மாதம், சுதா கொங்கரா மற்றும் ஹோம்பலே பிலிம்ஸ் இணைந்து உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதில் தான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அறிவிப்பு வெளியானபோது, ​​தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கையில், “சில உண்மைக் கதைகள் சொல்லத் தகுதியானவை, சரியானவையும் கூட. ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், இயக்குநர் சுதா கொங்கராவுடன் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. எங்களின் எல்லாப் படங்களையும் போலவே, இதுவும் உங்களை ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவருடைய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement