சுங்கத்துறை அதிகாரிகள் இன்று காலை புகழ்பெற்ற நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும், முன்னணி நடிகர் மம்முட்டி வீட்டிலும் அதே விதமான ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, பூட்டான் நாடு வழியாக இந்தியாவுக்குள் கார்கள் இறக்குமதி செய்யும் முறையில் சட்டவிரோதங்கள் உள்ளதாக அமைந்துள்ள தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பூட்டான் நாடு வழியாக சில கார்கள் கொண்டு வரப்படுவதாக சந்தேகம் எழுந்த நிலையிலேயே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கார்கள் இறக்குமதி செய்யப்படும் முறையில் பல்வேறு விதமான சிக்கல்கள், சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 23-ஆம் தேதி காலை, இந்த புகார்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் மற்றும் மம்முட்டி ஆகியோர் வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த ரெய்டுகள் ஒவ்வொரு நடிகரின் சொந்த வீடுகளில் ஒரே நேரத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவலின்படி, நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் இருந்த இரண்டு கார்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் பூட்டான் வழியாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துல்கர் சல்மான், தற்போது எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. அவருடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் பல்வேறு ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்டாலும், இவர் அதற்குப் பதிலளிக்கவில்லை.
Listen News!