• Jan 18 2025

மாபெரும் வெற்றியடைந்த அமரன்..!! GV பிரகாஷுக்கு எஸ்கே கொடுத்த காஸ்ட்லி கிப்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போடுகின்றது. மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராணுவ வீரராகவே வாழ்ந்து உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்களும் மிகவும் எமோஷனல் ஆகி அழுத காட்சிகள் வைரலானது.

கடந்த ஆண்டு சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியார்கள் வரை கவர்ந்த படமாகவும் அதில் அயலான் என்ற வேற்றுக்கிரகவாசியின் கதை ரசிக்கக் கூடிய வகையிலும் காணப்பட்டது. ஆனாலும் விமர்சன ரீதியில் வரவேற்பை பெற்ற அயலான் திரைப்படம் வசூல் ரீதியில் தோல்வி அடைந்திருந்தது.

d_i_a

இதைத்தொடர்ந்து நாட்டுக்காக வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க திட்டமிட்டனர். அதன்படி இதில் ராணுவ வீரராக நடித்த சிவகார்த்திகேயன் தனது உடலை தேற்றி கட்டுக்கோப்பாக மாற்றி இருந்தார். மேலும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.


இந்த திரைப்படம் வெளியான முதல் நாளையே 42.3 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகச்சிறந்த திருப்புமுனையாக அமைந்துள்ளது. மேலும் தற்போது ஒன்பது நாட்களில் முடிவில் 200 கோடியை எட்ட உள்ளது அமரன் திரைப்படம்.

இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த படத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு சிறிய பரிசு ஒன்றை வழங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். அதன்படி ஜிவி பிரகாஷுக்கு  TAG Heuer என்ற வாச்சை பரிசாக கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.



Advertisement

Advertisement