• Dec 04 2024

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார்ட் நடிகை நயன்தாரா இன்று டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார். படிப்படியாக வளர்ந்து தனது நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கண்டுள்ளார். ஆனாலும் அதை தகர்த்து மேலே வந்துள்ளார். 


முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை விரும்பி காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார். தனது பிள்ளைகளை விக்கி நயன் இருவருமே அன்பாக கவனித்து கொள்கின்றனர். 


d_i_a

அத்தோடு நயன் பிஸினஸிலும் ஈடுபட்டு வருகிறார். பெமி நயன் நாப்கின்ஸ், 9 சென்ட் போன்ற பல உற்பத்திகளை தயாரித்து பிஸ்னஸ் செய்து அதிலும் டாப்பில் இருக்கிறார். அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலம் வொலிவுட்டில் அறிமுகமாகி அங்கேயும் ரசிகர்களை அள்ளிக்கொண்டார். தற்போது ஒரு சூப்பர் நடிகையாக ,குடும்பத்தரசியாக, அம்மாவாக ,மனைவியாக,பிஸ்னஸ் லேடியாக கலக்கி வருகிறார் நயன்.    


இந்நிலையில் நெட்பிள்ஸ்க் நயன்தாராவின் வாழ்க்கை பார்வையை விடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ராணா டகுபதி, டாப்ஸி, நாகார்ஜுனா அக்கினேனி, நெல்சன், அட்லீ, விக்னேஷ் சிவன், நயன்தாரா அம்மா , ராதிகா உள்ளிட்ட பலர் நயன்தாரா தொடர்பாக கருத்துக்களை கூறியுள்ளார். இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ... 



Advertisement

Advertisement