பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று போலீஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கு சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இந்நிலையில் இன்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்ற தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. வீட்டுக்கு வந்த அல்லு அர்ஜுனை மனைவி குழந்தைகள் கட்டி அணைத்து வரவேற்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நேற்று அல்லு அர்ஜுனை கைது செய்து விசாரணைக்காக அழைத்து செல்வதற்கு போலீசார் வந்த போது அவரின் மனைவி கண்ணீர் மல்க நின்றார். அவருக்கு ஆறுதல் சொல்லி கன்னத்தில் முத்தம்மிட்டு சென்றார் அல்லு அர்ஜுன். இந்த வீடியோக்களும் வைரலாக நிலையில் இன்று அவர் விடுதலையாகி வெளியே வரும் போது அவரின் மனைவி, குழந்தைகள் அவரை கட்டி அனைத்து கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.
அத்தோடு நடிகர் அல்லு அர்ஜுன் தான் நலமாக இருக்கிறேன் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இவர் கைதானதினால் கவலையடைந்த ரசிகர்களுக்கு இப்போதுதான் நிம்மதியான செய்தி கிடைத்துள்ளது. சமீபத்தில் புஷ்பா 2 படத்தை பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தினாலே விசாரணைக்காக இவர் கைது செய்து அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Allu Arjun is Back Home!
Emotional Moment for Family.
pic.twitter.com/jjxYhIhjxl
Listen News!