• Nov 14 2025

“சினிமா கிறுக்கன்" படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டிக் கொண்டாடிய வனிதா! குஷியில் படக்குழு

subiththira / 22 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகத்தில் புதிய படப்பிடிப்பு நிகழ்வுகள் ரசிகர்களை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தற்போது, அடுத்த பெரிய படமாக எதிர்பார்க்கப்படும் “சினிமா கிறுக்கன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு விழாவை கொண்டாடியுள்ளது. 


அதன்படி, நடிகை வனிதா படக்குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி, படப்பிடிப்பு முடிந்ததை மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார். இந்த இனிய தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில், தக்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது நடிப்பு , திறமை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும், சீயோன் ராஜா இப்படத்தை இயக்குகிறார். அவர் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகின்றார். 


இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்ததை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள் வனிதா மற்றும் படக்குழுவினர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டதும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement