இசையுலகையும் சமூக வலைத்தளங்களையும் கலக்கவைத்த அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் நியூயார்க்கில் ஒன்றாகக் காணப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை ஒரு பிரிட்டிஷ் யூடியூபர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் நியூயார்க்கின் தெருவில் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. வீடியோ வெளிவந்த சில நிமிடங்களிலேயே அது சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவி, ரசிகர்களும் நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகிய பிறகு, அனிருத் மற்றும் காவ்யா இடையிலான உறவு குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பலரும் “இது உண்மையா?”, “இருவரும் டேட் செய்கிறார்களா?” போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதுவே முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அனிருத் மற்றும் காவ்யா மாறன் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்தன. அப்போது அனிருத் இது பொய்யானது என மறுத்திருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது வெளியான வீடியோ அந்தக் கருத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ரசிகர்கள் இதை பார்த்தவுடன் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!