தமிழ் திரையுலகில் பலரையும் கவர வைத்த நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கையைப் பற்றிய திறந்த உரையை பகிர்ந்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த “வடசென்னை” திரைப்படத்தில் அவர் நடித்த “சந்திரா” கதாபாத்திரம் பெரும் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்றது.

ஆனால், அதன்பிறகு எந்தப் புதிய பட வாய்ப்புகளும் அவருக்கு வரவில்லை என ஆண்ட்ரியா வெளிப்படையாக தற்பொழுது கூறியுள்ளார். ஒரு பேட்டியில் ஆண்ட்ரியா கூறியதாவது, “வடசென்னை படத்தில் ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்ததும் பாராட்டுகள் வந்தது. ஆனால் அதன்பிறகு எனக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
உண்மையில், என்னை வைத்து என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பல நடிகர்கள் அவர்களது படங்களில் பவர்புள் பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை. " எனத் தெரிவித்தார்.

நடிகையின் இந்த கருத்து திரையுலகில் ஒரு முக்கிய விமர்சனத்தைத் தூண்டும் வகையில் உள்ளது. பல நடிகர்கள் மற்றும் நடிகைகள், குறிப்பாக பவர்புள்ளான பெண் கதாபாத்திரங்களை நடிக்க விரும்புவதைத் தவிர்க்கும் நிலைமையை இந்த உரை வெளிப்படுத்துகிறது. இந்தத் தாக்கத்தை ஆண்ட்ரியா தனது அனுபவத்தில் நேரடியாக சந்தித்ததாக கூறுகிறார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!