• Jan 18 2025

அஜித் ரசிகர்கள் சபரிமலையில் புதிய பட டீசருக்கான கோரிக்கை..!வீடியோ வைரல்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மீண்டும் ஒன்று செய்து வைத்துள்ளனர். சபரிமலைக்கு சென்று அஜித்தின் புதிய படம் "விடாமுயற்சி" டீசர் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் போது, அவர்கள் கையில் பேனர்கள் பிடித்து, "அஜித்தே கடவுளே" என்று முழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


சமீப காலமாக, "அஜித்தே கடவுளே" என்ற முழக்கம் அஜித் ரசிகர்களிடையே அதிகமாக பிரபலமாகியுள்ளது. எந்த இடமாக இருந்தாலும்,பல  நிகழ்வுகளில் இந்த வாசகம் ஒலிக்கிறது. இதுவே ரசிகர்களின் அஜித்தின் மீதான பாசத்தைப் பிரதிபலிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.வீடியோவைப் பார்த்த சிலர் இதனை ரசித்து பாராட்டியுள்ளதோடு, மற்ற சிலர் இவ்வாறான செயல்கள் ஆன்மிக இடங்களில் தேவையா என கேள்வியெழுப்பியுள்ளனர்.

Advertisement

Advertisement