• Dec 04 2024

விஜய் டிவில மரியாதை இருந்துச்சு.. ஆனா காசுக்காக அதை பண்ண மாட்டேன்! SK அதிரடி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறிய நடிகர்களுள் மிக முக்கியமானவராக இன்று திகழ்ந்து வருகின்றார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத் திரையில் தொகுப்பாளராக காணப்பட்ட இவர், இன்று பலரும் வியக்கும் பிரபல நாயகனாக வலம் வருகின்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் சிவகார்த்திகேயன். அதன் பின்பு தனுஷ் நடித்த 3 படத்தில் அவருக்கு நண்பனாக நடித்தார். ஆரம்பத்தில் காமெடியனாக கலக்கி வந்தவர் அதன் பின்பு நாயகனாகவும் உருவெடுத்தார்.

அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் மெரினா, மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெளியாகின. அதில் எதிர்நீச்சல் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த திருப்பு முனையாக காணப்பட்டது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது.

d_i_a

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. உயிரிழந்த மேஜர் முகுந்து வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் ராணுவ வீரராகவே சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். கிட்டத்தட்ட 300 கோடிகளை வசூலித்திருந்தது இந்த திரைப்படம்.


இந்த நிலையில், சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், விஜய் டிவில எனக்கு மரியாதை இருந்தது.. சக மனிதனாக நடக்கிறது தான் சுயமரியாதை.. எனக்கு அப்போ சேனல்ல பெரிய சம்பளம் கிடையாது.. ரொம்பவே குறைவுதான்.. ஆனால் அது எனக்கு பிரச்சனை இல்லை..

எனக்கான தளமும் மேடையும் அவங்க அமைச்சு தராங்க.. அதை வச்சு நான் வருவாய் எடுக்க முயற்சி பண்ணுகிறேன் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இதை எல்லாம் தாண்டி அவங்க எனக்கு மரியாதை கொடுத்தாங்க.. அந்த மரியாதை எனக்கு யார் கொடுக்கலையோ யாராக இருந்தாலும் எவ்வளவு ஆதாயம் கிடைத்தாலும் அவங்க கூட நான் இருக்க மாட்டேன் என்று சிவகார்த்திகேயன் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகின்றது.


Advertisement

Advertisement