• Dec 04 2024

தனது திருமண தேதியை அறிவித்த வெற்றி வசந்த்.. அடுத்த வாரமே டும்.. டும்.. டும்..

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகனாக நடித்து பிரபலமானவர் தான் வெற்றி வசந்த்.  இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது வெற்றி வசந்துக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிலும் முதல் இடத்தில் காணப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை எட்டிப் பிடித்தது. ஆனாலும் நாளடைவில் சரிவை சந்தித்தது.

d_i_a

நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக் களத்துடன் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் முக்கியமானதாக சிறகடிக்க ஆசை சீரியல் காணப்படுகின்றது. இதில் கதாநாயகனாக வெற்றி வசந்தும் நாயகியாக கோமதிப் பிரியவும் நடித்து வருகின்றார்கள்.


இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெற்றி வசந்த் பொன்னி சீரியலில் நடிக்கும் வைஷ்ணவியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தமும் எளிமையாக நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்கள். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருவதோடு பலரும் அவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement