• Apr 24 2025

சிறகடிக்க ஆசை ஊரில் மனோஜ் ஆனந்தா சொல்லிய அட்வைஸ்! வீடியோ ரிலீஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கனடா வேலைக்கு போகும் ஆசையில் சாமியார் சொன்ன பரிகாரத்தின்படி கோயில் வாசலிலிருந்து பிச்சை எடுக்கும் மனோஜை,  இன்றைய எபிசோட்டில் மீனாவும் முத்துவும் பார்த்து வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்.

வீட்டுக்கு வந்த மனோஜை பார்த்த விஜயா, உன்னை எப்படி வளர்த்தன், உன்ன ராஜா மாதிரி வளர்த்தனே என விஜயாவும் அண்ணாமலையும் கவலைப்படுகிறார்கள். ஆனாலும் எனக்கு வேற வழி தெரியல நீங்களும் காசு தர இல்லை. அதனால தான் சாமியார் சொன்ன பரிகாரத்தை செஞ்சன்  என மனோஜ் பரிதாபமாக சொல்லுகிறார்.


இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜாக நடிக்கும் ஸ்ரீதேவா அவரது நண்பருடன் ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், பெத்தவங்க பேச்சைக் கேட்டு இருந்தா இந்த நிலைமைக்கு வந்திருப்பனா?  நீங்களும் இந்த நிலைக்கு வரக்கூடாது என்று நினைத்திருந்தால் பெத்தவங்க பேச்சைக் கேட்டு நல்லா படிங்க என அட்வைஸ் பண்ணி உள்ளார். மேலும் படிச்சு வேலைக்கு போங்க சோம்பேறியா இருக்காதீங்க என்று கூறியுள்ளார்.

அவர் அருகில் இருந்த நண்பர் சுவாமியே மனோஜ் ஆனந்தா சொல்லுறார் என்ன சொல்ல, ஆமா ஊரு சிறகடிக்க ஆசை ஊரு  என மனோஜ் சொல்லுகிறார். 


Advertisement

Advertisement