தமிழ் சினிமாவை அடுத்த கட்டதிற்கு எடுத்து செல்லும் இயக்குனர்கள் என்றால் பலரை கூறலாம். அவ்வாறு இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ஆவார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது மக்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

முன்னணி பிரபலமாக இருக்கும் இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கர் அவர்களின் திருமணமானது நடைபெற்று முடிந்துள்ளது. சினிமா துறையில் பல பிரபலங்களுக்கு சங்கர் பழக்கமானவர் என்பதனால் இவரது திருமணத்திற்கு பல சினிமா நடிகர் நடிகைகள் , அரசியல் வாதிகள் என அனைவரும் வருகை தந்துள்ளனர்.இவ்வாறு குறித்த திருமணத்திற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் , உலக நாயகன் கமலகாசன் ஆகியோரும் வருகை தந்ததுடன் ,இணயக்குனர் மணி ரத்னம் விக்ரம் போன்றவர்களும் வருகை தந்திருந்தனர். மற்றும் சூர்யா , கார்த்தி ஆகியோர் குடும்பத்துடன் வருகை தந்ததுடன் , நயன்தாரா விக்னேஷ் சிவனுடனும் விஜயின் மனைவி சங்கீத நண்பர்களுடனும் வருகை தந்துள்ளனர். மேலும் பல பிரபலங்களின் புகைப்படம் வெளியாகா விட்டாலும் பலர் கலந்துகொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவுக்கும் பலர் வருகை தந்துள்ளனர் . அவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி , இயக்குனர் நெல்சன் , வெற்றிமாறன், லோகேசுகநகராஜ் , அனிருத் மற்றும் பல பாலிவுட் நடிகர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கலந்துகொண்டவர்கள் புகைப்படங்கள் இதோ









                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!