• Oct 12 2025

அடேங்கப்பா.! ஆன்மீக ஒளியில் மூழ்கிய சூப்பர் ஸ்டாரின் புதிய தோற்றத்தைப் பாருங்களேன்..

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வரும் சில புகைப்படங்களின் மூலம் மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் கவனத்தை திரும்ப செய்துள்ளார்.


 இந்த புகைப்படங்களில் ரஜினியை இமயமலைப் பகுதியில் உள்ள பாபாஜி குகைக்கு அருகில் வித்தியாசமான தோற்றத்தில் ஸ்டைலாக நிற்கும் நிலையில் பார்த்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இமயமலையில் அமைந்துள்ள பாபாஜி குகை என்பது ஆன்மீகத்தின் ஆழமான இடமாக கருதப்படுகிறது. இந்த இடம்,ஆன்மீக சக்தியுடைய சித்தரின் தியானத்திற்கும், அவரைப் பற்றிய பல ஆன்மீக கதைசொல்லல்களுக்கும் பெயர் பெற்றதாகும். பல ஆன்மீக தேடலாளர்கள், இந்த குகையை சென்று தரிசனம் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.


இந்த இடத்திற்கு சென்றுள்ள ரஜினிகாந்த் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. சில புகைப்படங்களில் அவர் ஜாக்கெட் அணிந்து, முகத்தில் தெளிவான ஆன்மிக அமைதியோடு, பின்புலத்தில் குகை தெரியும் வண்ணம் அமர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement