• Jan 19 2025

அட்ஜஸ்ட்மென்ட்க்கு இப்படி தான் அழைத்தனர்! அந்த இடத்தில் கைவைத்து பேசினார்! நடிகை ரெஜினா பகிர்ந்த மோசமான அனுபவம்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரெஜினா. இவர் தமிழில் வெளிவந்த மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்த நிலையில், நடிகை ரெஜினா தனது சினிமா வாழ்க்கையில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசினார். இதில் "என்னை போன் கால் வாயிலாக தொடர்பு கொண்டு, அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா என்று கேட்டார்கள். 


நான் சம்பளத்தில் எதோ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டேன். ஆனால், அதன்பின் தான் தெரிய வந்தது, அவர்கள் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட் வேறு என்று. அதன்பின் நான் அப்படியொரு அனுபவத்தை சினிமாவில் சந்திக்கவில்லை". "இது சினிமாவில் மட்டுமே இல்லை. எல்லா இடத்திலும் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. 


 "நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது, ஒரு முறை ஆள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், என் முன் நடந்துவந்து எனது உதட்டில் கை வெச்சி தவறாக நடந்துகொண்டார்" என தான் சந்தித்த மோசமான விஷயங்கள் குறித்து ரெஜினா வெளிப்படையாக பேசினார். இந்த விடயம் தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement