• Jan 19 2025

ஹிட் படம் தயாரிச்சா நல்லவரா..?? மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் மீது பரபரப்பு புகார் வைத்த நடிகை!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் அதிகப்படியான வசூலை வாரிக் குவித்து வருகின்றது மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ்.

இந்த படம் கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் அத்தனையும் பெரிதளவில் எடுபடாத நிலையில், மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் அத்தனைக்கும் ஈடாக நூறு கோடி ரூபாய் மட்டும் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், இவருடைய முதல் படத்தில் நடித்த நடிகை  பிராப்தி எலிசபெத் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை முன் வைத்துள்ளார்.


அதாவது இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் ஏன்  மஞ்சும்மல் பாய்ஸ் என பெயர் வைக்க வேண்டும் மஞ்சும்மல் கேர்ள்ஸ் என வைத்திருக்கலாமே என கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு நடிகை பிராப்தி, இந்த படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றி சொல்ல நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு என பதிவிட்டு இருந்தார்.


அதை தொடர்ந்து அது என்ன விஷயம் என பலரும் கேட்க, அவர் சிதம்பரம் மீது மீ டூ புகாரையும் கிளப்பியிருந்தார். இதுதான் தற்போது அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவமாக இருக்கிறது.


ஆனாலும் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் 100 கோடி ரூபா வரையில் வசூல் பெற்றுள்ள நிலையில், இத்தனை நாட்கள் கழித்து இந்த விஷயத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என குறித்த நடிகையை நெட்டிசன்கள் ரோஸ்ட்  செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement