• Jan 16 2026

ரஜினிகாந்தின் சாதனைக்கு பாராட்டு விழா நடத்தப்படும்..!நடிகர் விஷாலின் உருக்கமான பதிவு...!

Roshika / 4 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய திரைப்படம் 'கூலி', ரசிகர்களிடையே பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம், ரிலீஸான முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.404 கோடிகள் வசூலித்தது. தற்போது இது ரூ.500 கோடியை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.


'கூலி' திரைப்படத்தில் ரஜினியின்  அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதைக்களம், ஸ்டைல் மற்றும் BGM அனைத்தும் ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளது.

இதேவேளை, நடிகர் விஷால் – நடிகை தன்ஷிகா ஆகியோர் திருமண நிச்சயம் செய்துகொண்டுள்ளனர். இருவரது இல்லத்தில், குடும்பத்தினர் முன்னிலையில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.


சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர் சங்கம் சார்பில் அவர் கூறியதாவது: "சினிமாவில் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பது உலக சாதனை. அதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு பாராட்டு விழா நடத்தப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement