• Sep 19 2025

காவேரிக்காக வீட்டை விட்டு வெளியேறும் விஜய்..! பரபரப்பான ஆட்டத்துடன் மகாநதி promo..

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான popular சீரியலான மகாநதியின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், விஜயோட பாட்டி நாங்க எல்லாரும் உனக்கு முக்கியம் இல்ல, இங்க இருக்கிற சொத்தும் தேவையில்ல, காவேரி தான் முக்கியமா என்று விஜயைப் பார்த்துக் கேட்கிறார். 


மேலும், இனிமேல் எல்லாத்தயும் இழந்து தான் நிக்கப் போற அதைப் பார்க்கிற சக்தி எனக்கில்ல நாங்க எங்கயாவது போயிடுறோம் என்கிறார். அதைக் கேட்ட விஜய் உங்களால காவேரியை ஏத்துக்க முடியாது என்றுமட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு என்கிறார்.


அத்துடன், என்னாலயும் காவேரியை விட முடியாது என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். அதைப் பார்த்து வீட்டில இருக்கிற எல்லாரும் விஜய் பின்னாடியே போகிறார்கள். இது தான் இன்றைய promo. 

Advertisement

Advertisement