ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தவித ரோல் கொடுத்தாலும் அதில் திறம்பட நடிப்பவர் நடிகர் சத்யராஜ். இவரது மனைவி பெயர் மகாலட்சுமி. இந்த ஜோடிக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர்.
நண்பன்,ராஜா ராணி , பாகுபலி, பாகுபலி 2 ,கனா உட்பட சத்யராஜ் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்திய மழை பிடிக்காத மனிதன், அன்னபூரணி ,எதிர்க்கும் துணிந்தவன் ,வீட்ல விசேஷம், லவ் டுடே போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தனக்கென தனியாக காட்டக்கூடிய கதாபாத்திரத்தினை தெரிவு செய்து நடிப்பத்தில் வல்லவர்.
தற்போது கைவசம் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் "நான் யானை மாதிரி. எங்க மண்ணு இருந்தாலும் நானே எடுத்து தலைல போட்டுக்குவேன். கே.எஸ்.ரவிக்குமாரோட ஒரு படத்தை வேணாம்னு சொல்லிட்டு வேறு ஒரு படம் நடிச்சேன். ரவிக்குமார் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு, நான் நடிச்ச படம் அட்டர் ஃபிளாப். அப்ப கொட்டுன முடிதான் இது இன்ன வரைக்கும் வளரல என்று கூறியுள்ளார்.
Listen News!