• Dec 04 2024

பிக் பாஸில் எந்த கண்டெண்டும் கொடுக்காத சிவகுமார் வெளியில என்ன சொல்லியிருக்காரு பாருங்க..

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 50 நாட்களைக் கடந்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஒரு மாதத்தின் இறுதியில் ஆறு வைல்ட் கார்ட் என்ட்ரிகளோடு முன்னெடுக்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வாராவாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகும் நிலையில் முதலாவதாக ரவீந்தர் எலிமினேட் ஆனார். அதைத் தொடர்ந்து அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகிய ஆறு பேரும் இதுவரையில் எலிமினேட் ஆகி இருந்தார்கள்.

ஆரம்பத்தில் ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளுக்கும் வகுத்துக் கொடுத்து இருந்தார்கள். ஆனாலும் கடந்த வாரம் முதல் வீட்டுக்கு நடுவில் போடப்பட்ட கோடு அளிக்கப்பட்டு ஒரே அணியாக பிக் பாஸ் வீடு மாறியது.

d_i_a

வீட்டிற்கு நடுவில் போடப்பட்ட கோட்டை எடுத்த கையோடு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் பிக் பாஸ் வீடு கலவர பூமி ஆனது. அடி தடி சண்டை என பரபரப்பு நிரம்பிய வாரமாக கடந்த வாரம் காணப்பட்டது.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த சிவகுமார் எந்த ஒரு கண்டெண்டும் கொடுக்காமல் அமைதியாகவே காணப்பட்டார். இவர் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்டாகி சென்றுள்ளார். தற்போது சிவகுமார் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு லைவில் பேசிய சிவகுமார் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது கூட நான் இப்போது சொல்லவில்லை என்றால் என்னை நினைத்து எனக்கே கேவலமா இருக்கும் என்று சொல்லியுள்ளார். மேலும் தனது 17 வருட சினிமா வாழ்க்கையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விடயம் என்று கூறியுள்ளார். தற்போது இவருடைய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement