விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி விஜய் சேதுபதியின் தொகுப்பில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பரபரப்பாக முன்னேறி வருகிறது. தற்போது நிகழ்ச்சி 55 நாட்களை கடந்து, பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன், நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்பாராத வகையில் எவிக்ட்டாகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷா, சமூக ஊடகங்களில் மீண்டும் செயல்பட தொடங்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
சமீபத்தில், குளத்தாங்கரை எடுத்த அழகான புகைப்படங்களை பகிர்ந்தார். அதோடு, தனது வாழ்வின் தன்னம்பிக்கை கருத்தாக, "தோல்வியில் விழும்போது சிரித்தவர்களின் முன் வெற்றி பெற்று எழுந்து, வியக்கும்படி வாழ்ந்துவிடு" என உற்சாகமான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
Listen News!