• Apr 30 2025

மேற்கத்தய கலாச்சாரம் மட்டும் போதாது..! – இளைஞர்களை எச்சரித்த நடிகர் ரஜினிகாந்த்..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பிற தலைமுறைகளுக்குத் தேவையான வழிகாட்டியாகவும் மாறியிருக்கின்றார். தன்னுடைய பாசம், பணிவு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் வழியாக நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தவர், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்றைய இளைஞர்கள் குறித்து உணர்வுபூர்வமாக உரையாற்றியிருந்தார்.

சென்னையில் நடந்த ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்துகொண்ட ரஜினிகாந்த், தனது அனுபவங்கள் மற்றும் நாட்டின் கலாசார முக்கியத்துவம் குறித்துப் பேசியிருந்தார். இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் கலாசாரச் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசிய ரஜினி, பாரத நாட்டின் பெருமையை உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தார்.

தனது உரையில் ரஜினிகாந்த் கூறியதாவது, "இன்றைய செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாசாரமும், ஆன்மீகப் பெருமையும் குறித்து தெரியாமல் இருக்கின்றனர். பிற நாடுகளின் கலாசாரம், உடைமை, வாழ்க்கை முறை எல்லாம் கவர்ச்சியாகத் தெரிந்தாலும், அதற்குள் அமைதியும் சாந்தமும் இல்லை. அதே நேரத்தில், பிற நாட்டு மக்கள் தான் இன்று இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரத்தை தேடித் தவம் போல் வருகின்றனர். ஆனால் நம் இளைஞர்கள் அதை அறியாமல் விட்டுவிடுகின்றனர். இது மிகவும் கவலையளிக்கிறது". என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement