• Apr 30 2025

"அனைவரின் படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.." நடிகர் சூர்யாவின் வைரல் பதிவு..

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள "ரெட்ரோ " திரைப்படம் மே முதலாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதுடன் சூர்யா -ஜோதிகாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்தில் வெளியாகிய இரண்டு பாடல்களும் அனைவராலும் வரவேற்கப்பட்டு வைரலாகியது.


மேலும் படத்தின் trailor வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் அனைத்தும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பட புரொமோஷனிற்கு ஆந்திராவிற்கு விஜய் தேவர்கொண்டா கலந்து சிறப்பித்து இருந்தார்.


இந்த நிலையில் இன்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் "டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3, ரெய்ட்-2 ஆகிய படங்களுக்கு வாழ்த்துகள்.அனைவரின் படங்களும் வெற்றி பெற்று, பார்வையாளர்களை மகிழ்விக்கட்டும். 'ரெட்ரோ'-விற்கு ஆதரவளிக்கும் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement