தமிழ் சினிமாவில் ஒவ்வொரு புதிய திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், விவாதங்களையும் உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் “பராசக்தி”. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகிறது.

‘பராசக்தி’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. சிலர் படத்தின் துணிச்சலான கதைக்களத்தையும், சமூக அரசியல் பின்னணியையும் பாராட்டி வருகிறார்கள். மற்றொரு தரப்பினர், சில காட்சிகள் மற்றும் திரைக்கதை அமைப்பு குறித்து தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தை பார்த்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, “Very Bold Movie… Super Second Half… Fantastic Performance.” என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளே தற்போது பராசக்தி படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
Listen News!