• Jan 15 2026

"EKO" திரைப்படத்தைப் பாராட்டிய நடிகர் தனுஷ்... வெளியான நெகிழ்ச்சிப் பதிவு வைரல்.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமா முழுவதையும் கவனித்து, நல்ல படைப்புகளை திறந்த மனதுடன் பாராட்டும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். அவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘EKO’ திரைப்படத்தைப் பார்த்து அளித்த பாராட்டு, தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலைப்பகுதியில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம் தான் EKO. இந்த திரைப்படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான போது அதிக விளம்பரமில்லாமல் வந்திருந்தாலும், அதன் கதைக்களம், சூழல் அமைப்பு, நடிப்பு மற்றும் காட்சியமைப்பு காரணமாக விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


EKO படத்தின் மையக் கதாபாத்திரமாக மலாத்தி என்ற பெண் காணப்படுகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் பியானா மொமின். மலாத்தி, மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண். அவர் கேரள – கர்நாடக எல்லையை ஒட்டிய ஒரு தனிமையான மலை எஸ்டேட்டின் உச்சியில் வாழ்கிறார்.

அவருடன் அவரது கணவர் சவுரப் சச்தேவா, கதையில் குரியச்சன் என்ற பெயரில் இடம்பெறுகிறார். இவர்கள் இருவரின் உறவு, அவர்களின் தனிமையான வாழ்க்கை, இயற்கையோடு இணைந்த சூழல் ஆகியவையே EKO படத்தின் மையமாக காணப்படுகின்றன.

துணை கதாபாத்திரங்களில், சந்தீப் பிரதீப், வினீத் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், EKO திரைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ், தனது கருத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.


அவர் அதன்போது, “EKO என்ற மலையாளப் படம் ஒரு மாஸ்டர் பீஸ். எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர் நடிகை பியானா மொமின். அவர் தலை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.” என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement