சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வர்- சின்னத்திரை சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை திருமணம் செய்த நிலையில் தனக்கும் தனது மனைவிக்கும் ஒருவழியாக விவாகரத்து கிடைத்து விட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் ஈஸ்வர் சின்னத்திரை சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ரேவதி என்ற பெண் குழந்தையும் உள்ளது. தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வரவே இந்நிலையில் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதை தட்டிக்கேட்ட தன்னை ஈஸ்வர் அடித்ததாகவும் ஜெயஸ்ரீ புகார் அளித்ததை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.
மேலும் ஜாமினில் வெளிவந்த ஈஸ்வர் மகாலட்சுமி தன்னுடைய தோழி என்றும், தங்களை தொடர்புப்படுத்தி ஜெயஸ்ரீ பேசுவது துளியும் உண்மையில்லை எனவும் தன்மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். அதுமட்டுமின்றி ஜெயஸ்ரீயை விவாகரத்து செய்து பிரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் 5 வருடமாக இழுபறியில் இருந்த இந்த விவாகரத்து கேஸ் தற்போது முடிவுக்கு வந்துள்ளது அதிகார பூர்வமாகவே இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஈஸ்வர்.
அந்த அறிக்கையில் "ஜெயஸ்ரீக்கும் தனக்கும் இடையேயான செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்து. இனி என் விருப்பப்படி வாழ்க்கையை வாழ உள்ளேன். நடிப்பில் தான் நான் கவனம் செலுத்த போகிறேன். இந்த சவாலான காலகட்டத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த கடவுளுக்கு நன்றி. இந்த விவாகரத்து தொடர்பாக எந்த ஒரு பேட்டியும் அளிக்க மாட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள் என்று பதிவிட்டுள்ளார் ஈஸ்வர். இந்த விடையம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!