விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் சவுந்தர்யாவுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதனால் இன்று என்ன சம்பவங்கள் நடைபெற இருக்கிறது என்று பார்ப்போம்.
பிக்பாஸில் இருந்து ஒரு அறிக்கை வருகிறது அதில் "சவுந்தர்யா இன்று மதிய உணவை சமைக்க வேண்டும், யாரும் உதவி செய்ய கூடாது, யாரும் எதுவும் சொல்லக்கூடாது, உக்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதனை கேட்ட சவுந்தர்யா "ஐயோ எனக்கு சமைக்கவே தெரியாதே" என்று அதிர்ச்சியாகிறார். மற்ற போட்டியாளர்கள் "சரி அப்ப நீங்க எல்லாரும் சாப்பிடுங்க காலையில நல்லா சாப்பிட்டோம் மதியம் விரதம் இருக்க போறோம்" என்று சொல்லி கலாய்க்கிறார்கள்.
கேமரா முன் வந்த சவுந்தர்யா "எவ்வளோ வோட் போடணுமா எனக்கு போட்டுட்டு மிச்சத்தை முத்துகுமரனுக்கு போடுங்க என்று சொல்கிறார்". அதற்கு முத்து "உனக்கு போட்டு மிச்ச மீதி பட்டத்தை எனக்கு போடுறதா? நல்லா இருக்குமா உன் கணக்கு என்று கலாய்க்கிறார்". அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது இனி என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!