விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் நடிகை சமீபத்திய பேட்டியில் "காதலன் புகைப்படத்தினை காட்டமாட்டேன் கண்ணுப்பட்டுரும்" என்று தனது காதல் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை ஸ்வேதா. சமீபத்தில் ஆரம்பித்த இந்த கதைக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவருக்கென ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது காதல் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில்" 2 வருடமாக லவ் பண்ணிட்டு இருக்கேன், வீட்டுல எல்லாருக்கும் தெரியும் அவங்களுக்கும் ஓகே தான். எனக்கு சூட் முடிஞ்சா கூட்டிட்டு போறது, மிட் நைட்டுல பிக்அப் பண்ணுறது எல்லாமே அவங்கதான். சீரியலை ஹாட்ஸ்டார்ல எனக்கு முதல்லையே பார்த்துருவாரு.
ரோமெண்ட்ஸ் சீன் எல்லாம் பார்த்தாலும் இதுவே கேட்க மாட்டாரு என்னுடைய வேலைய மதிச்சு சப்போட் பண்ணுறாரு. அவரு போட்டோவை காட்ட கூடாது அப்டின்னு இல்லை கண்ணு பட்டுரும்னு ஒரு ரீசன் இருக்கு ஆனா ஒரு டைம் வரும் அப்போது காட்டலாம்னு இருக்கேன்" என்று ரொம்ப ஹாப்பியாக கூறியுள்ளார். இந்த விடையம் தற்போது சோசியல் மீடியாவில் வலம் வருகிறது.
Listen News!