• Jan 18 2025

அவருக்கு நடிப்புதான் சரி அரசியல் சரிவராது! கோட் படத்தை 4 முறை பார்த்தேன்! தவெகவுக்கு ஓட்டு போட மாட்டேன் முக்கிய பிரபலம் கருத்து...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கிய விஜய். வரும் 2026ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதனால் "விஜய் நேரடியாக முதல்வராகிவிட முடியாது. அவருக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கலாம். ஆனால் அனைவரும் அவருக்கு தான் ஓட்டு போடுவார்கள் என சொல்ல முடியாது. முதல் தேர்தலிலேயே அவர் முதல்வராக முடியாது" என்று அரசியலில் இருப்பவர்கள் கூறி வருகிறார்கள்.


இந்நிலையில் விஜய்க்கு ஓட்டு போட மாட்டோம் என நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். விஜய் பற்றி போஸ் வெங்கட் கூறியதாவது, விஜய் சார் அரசியல் கட்சி ஆரம்பித்த நேரமே தப்பான நேரம் என நினைக்கிறேன். அவர் இன்னும் 20 வருஷம் காத்திருக்க வேண்டும். அதற்குள் விஜயகாந்த் அவர்கள் அல்லது கமல் ஹாசனின் கட்சி மாதிரி இணைந்துவிட்டால் முடிந்தது. 


அவர் நடிச்சுக்கிட்டே அரசியல் பண்ணலாம். நடிக்க மாட்டேன்னு சொல்வது வேஸ்ட். படத்துக்கு ரூ. 200 கோடி வாங்குகிறார். விஜய் ஒரு மிகச் சிறந்த நடிகர். கோட் படத்தை என் குடும்பத்துடன் சேர்ந்து நான்கு முறை பார்த்தோம். நாங்க யாரும் அவருக்கு ஓட்டு போட மாட்டோம். ஆனால் அவரை விட சிறந்த நடிகர் இல்லை. விஜய் சார் ஹீரோவாக இருந்துக்கிட்டே அரசியல் செய்யலாம். ஒரு மாநாட்டுக்கு ரூ. 60 கோடி செலவாகும். நான்கு மாநாடு நடத்தினால் காசு எல்லாம் காலியாகிடும். அதனால் நடித்துக் கொண்டே இருந்தால் நல்லது என்றார். 

Advertisement

Advertisement