• Oct 13 2024

கோட் படத்துல நானும் இருந்தேன் அத டிலீட் பண்ணிட்டாங்க! சிவா இடத்துக்கு வர ஆசைப்படும் சதீஷ்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சதீஷ் தானும் அந்த திரைப்படத்தில் நடித்ததாக கூறிவருகிறார். 


கோட் திரைப்படத்தில் ஒரு காட்சியில் காந்தி கதாபாத்திரம் சிவகார்த்திகேயனிடம் உதவி ஒன்றைக் கேட்பார் . அப்படி கேட்கும் பொழுது, இறுதியாக மைதானத்தில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை உங்களின் கையில் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு செல்வார் விஜய்.


படத்தில் முன்னமே சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்பது தகவலாக வந்திருந்தது. அவர் உண்மையில் படத்தில் கேமியோ ரோலியில் தான் நடித்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் செமி பைனல் போட்டியானது நடைபெற்றுக் கொண்டிருக்கும். அந்தப்போட்டியில் சென்னை அணிக்கு ஆதரவாக 17 ம் நம்பர் மஞ்சள் ஜெர்சி அணிந்து வரும் சிவகார்த்திகேயன், படத்திலும் சிவகார்த்திகேயனாகவே வந்திருக்கிறார். 


அப்போது அவர் அதில் நீங்க முக்கியமான வேலையா போறீங்க நான் நீங்க அந்த பாருங்க நான் இத பாத்துக்கிறேன் என்று கூறுவார். அதனை அடுத்து விஜய் இடத்திற்கு சிவா வரப்போவதாக கூற ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் சதிஷ் அளித்த பேட்டியில் சிவா இத நான் பாத்துக்கிறேன்னு சொல்லுவாரு அப்போ நன் அப்போ உங்க இடத்தை நான் பாத்துக்கிறேன் என்று சொல்லுவேன் அது படத்துல இல்ல நல்லவேல டிலீட் பண்ணிட்டாங்க என்று கூறியுள்ளார். இதனால் தற்போது நடிகர் சதீஷை சிவா ரசிகர்கள் ட்ரோல்  செய்து வருகின்றனர். 




Advertisement