• Jan 19 2025

ஐஸ்வர்யா பற்றி அபிஷேக் போட்டுடைத்த உண்மை! ஆராத்யா தனியே வாழ காரணம் இதுதானா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை ஆக காணப்படுபவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர், தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானார். அத்துடன் உலக அழகி பட்டத்திற்கும் சொந்தக்காரியாக காணப்படுகின்றார்.

2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு தனக்கு ஏற்ற திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதேபோல அபிஷேக் பச்சனும் படங்களில் நடிப்பதை பிசியாக கொண்டுள்ளார்.

தமிழில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார். பார்ப்பதற்கு அந்த கேரக்டருக்கு ஏற்ற வகையிலேயே அவர் ஜொலித்து இருந்தார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் அவரது அழகு பல ரசிகர்களையும் கட்டி போட வைத்தது.

d_i_a

இதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் இருவருக்கு இடையேயும் விரிசல் விழுந்து உள்ளதாகவும் பல தகவல்கள் கசிந்தது. ஆனால் இவற்றை தவிடு பொடியாக்கும் வகையில் அமிர்தாபச்சன் ஒரு நிகழ்ச்சியில் தமது நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டி தாம் இன்னும் ஒன்றாகத்தான் வாழ்ந்து வருகின்றோம் என்று தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், அபிஷேக் பச்சன் மீண்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது பிரபல சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின் போது அவர் ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி சொல்லியுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், பிள்ளைகள் அவர்களுடைய தாயுடன் செலவிடும் நேரத்தை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. எனது மகள் ஆராத்யாவை ஐஸ்வர்யா ராய் பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தில் தான் நான் வெளியில் பல இடங்களுக்கு சென்று படங்களில் நடிக்க முடிகின்றது. எனவே நான் ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி கடன் பட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் .

Advertisement

Advertisement