இந்திய சினிமாவின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் ‘தாரே ஜமீன் பர்’. ஒரு சிறுவனின் உளவியல் நிலையையும், கல்வி முறைமை மீதான விமர்சனத்தையும் கொண்டு உருவான அந்தப் படம், இந்திய ரசிகர்களின் உள்ளங்களை நெகிழச் செய்துள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பாதையைத் தொடரும் ஒரு புதிய படைப்பு தற்பொழுது திரைக்கு வரவிருக்கின்றது. அப்படத்திற்கு ‘சிதாரே சமீன் பார்’ என்ற தலைப்பையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமீர் கான் நடிக்கின்றார். மேலும் இப்படத்தை இயக்குவது ஒரு தமிழர் என்பதிலும் பெருமை இருக்கிறது. அதாவது, "கல்யாண சமையல் சாதம்" படத்தின் இயக்குநர் பிரசன்னா தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
2007ம் ஆண்டு வெளிவந்த ‘தாரே ஜமீன் பர்’ படம், ஒரு உளவியல் நிலையை மையமாகக் கொண்டு, குழந்தைகளின் சிந்தனை வலிமைகள் குறித்து பேசும் சிறந்த திரைப்படமாக இருந்தது. இப்போது ‘சிதாரே சமீன் பார்’ அதே கதையின் பின்னணியில், ஆனால் புதிய கதாப்பாத்திரங்கள், புதிய சூழ்நிலைகள், மற்றும் புதுப் பார்வையுடன் வரவிருக்கின்றது.
‘சிதாரே சமீன் பார்’ படம், இந்தியா முழுவதும் 2025 ஜூன் 20ம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியீடு செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
Listen News!