• May 29 2025

போட்டோஸ் பாத்தாச்சு.. இப்ப வீடியோவைப் பாருங்கப்பா.. திருமண வீடியோவை வெளியிட்ட பிரியங்கா!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சியின் கலகலப்பான சிரிப்பின் மற்றொரு பெயர் என்றே சொல்லலாம் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. 'கலகலப்பின் ராணி' என்று ரசிகர்கள் அழைக்கும் பிரியங்கா, எங்கு சென்றாலும் சிரிப்பையும் சந்தோஷத்தையும் அழைத்துச் செல்லும் தன்மை உடையவர். விஜய் டீவியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண் இவர், 'சூப்பர் சிங்கர்', 'Start Music' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக திகழ்ந்து, குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.


கடந்த ஏப்ரல் 16ம் திகதி திடீரென திருமணம் பிக்ஸ் செய்திருந்தார் என்ற செய்தி ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விஜய் டீவி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இவர் DJ வசி என்பவரைத் திருமணம் செய்ததாக தகவல்கள் வெளிவந்த வேளையில், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் குவிந்தன.


இந்த இன்ஸ்டா ஸ்டோரிக்கு முன்னதாகவே சில திருமண புகைப்படங்களை பிரியங்கா பகிர்ந்திருந்தார். திருமணத்திற்குப் பிறகும் தனது வேலைக்குச் சற்றும் இடைவேளை விடாமல்,புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றார்.

பிரியங்கா தேஷ்பாண்டே தனது வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். 'தொகுப்பாளி' என்ற வேடத்திலிருந்து, ‘காலத்தால் கனிந்த காதல்’ என்ற புதிய தலைப்புக்குள் நுழைந்திருக்கிறார். அவருடைய சிரிப்பும், சந்தோஷமும் தொலைக்காட்சி சுவாரஸ்யத்தை கொண்டுவரும் என்பதை போலவே, அவரது வாழ்விலும் அந்த வேடிக்கையும், சிரிப்பும் என்றும் தொடரட்டும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது தனது திருமணத்தின் அனைத்து நினைவுகளையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement