இந்திய சினிமாவில் தனக்கென ரசிகர்களை பட்டாளத்தை கொண்டவர் தல அஜித். இவர் தற்போது "குட் பேட் அக்லி " திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. தற்போது அஜித் ஹோட்டல் ஊழியர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் அஜித் நடித்து வெற்றியைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் எனப் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
"குட் பேட் அக்லி" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார் ரேஸிலும் வெற்றியைப் பெற்றார். மேலும் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதையும் தனது பிறந்தநாளையும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தார். இப்படி அடுத்தடுத்து பல சந்தோஷமான விடயங்கள் அவரது வாழ்வில் இடம்பெற்றன.
அத்தகைய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். அதாவது பட வெற்றி ,கார் ரேஸ் வெற்றி ,விருது போன்ற அனைத்து மகிழ்ச்சிக்கும் சேர்த்தே இந்த கேக் வெட்டியதாகவும் கூறியிருந்தார். அவ் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களும் பல கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர் .
Listen News!