தமிழ் சினிமாவில் கதைகளை நம்பி படம் இயக்கி வருபவர் இயக்குனர் மணிகண்டன். எதார்த்தனமான கதைக்களத்தை மையமாக வைத்து இவர் இயக்கம் படங்கள் நம் மனதை தொடும். இவரின் வீட்டில் கொள்ளை அடித்த சம்பவம் ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது.

காக்கா முட்டை, கடைசி விவசாயி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற தரமான படங்களை இயக்கியுள்ளார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். உசிலம்பட்டி எழில் நகரில் அவரது சொந்த வீடு மற்றும் அலுவலகமும் இருக்கிறதாம்.

மணிகண்டன் சென்னையில் படத்தின் வேலைக்காக குடும்பத்துடன் இருந்த சமயத்தில், அவரது வீட்டில் பூட்டை உடைத்து சில மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். மணிகண்டன் வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு அவரின் டிரைவர்கள் உணவு வைக்க சென்றுள்ளனர். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதாய் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பவுன் தங்க நகையும், ரூ. 1 லட்சம் பணமும் மற்றும் தேசிய விருதுக்காக மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட இரண்டு வெள்ளி பதக்கங்களும் திருப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது.
                             
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!