• Apr 29 2026

கேரளா மாந்திரீகர்களால் விஜய்க்கு வசியம் வைத்த புஸ்ஸி ஆனந்த்? என் மகன் அப்பாவியென கதறும் சந்திரசேகர்?? முக்கிய பிரபலம் பகீர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கும் மேல்  சம்பளம் வாங்கும், முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.

இவர், தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்தது, மக்கள் மத்தியில் மேலும் இவருக்கு மரியாதையும்  வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஒரு பக்கம் அரசியல் செயற்பாடுகளில் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் கோட் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகர் விஜய்.

இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு வசியம் மருந்து வைத்து விட்டார் என்று விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கூறியதாக,  பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. அதன்படி அவர் கூறுகையில்,


புஸ்ஸி ஆனந்த் என்பவர் யாரென வினாவினால், புஸ்ஸி என்பது புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி. அந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களே 5 ஆயிரம் பேர் தான் இருப்பார்கள். அதில் 2000 வாக்குக்களை பெற்று புஸ்ஸி அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

இவ்வாறு எம்.எல்.ஏவான ஆனந்த், தனது தொகுதியின் பெயரை தனது பெயரோடு நிறுத்திக் கொண்டார். இவரது தொழில் விறகுக்கடை வியாபாரம் தான். 

இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர் மன்ற கிளைக் கழக தலைவராக  புஸ்லி தொகுதியில், ஆனந்த் இருந்தார். அதன்பின் விஜயின் தந்தை அவரை தமிழகத்தின் விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆக்கினார். நாளடைவில் விஜயுடன் நெருங்கி பழகி, விஜயின் தந்தைக்கே வேட்டு வைத்து விட்டார்.


இவ்வாறான நிலையில், என் மகன் ஒரு அப்பாவி. கேரளாவில் இருந்து மாந்திரீகர்களை அழைத்து வசியம் வைத்தது மட்டும் இல்லாமல் அப்பா, அம்மாவிடம் இருந்து கூட விஜயை பிரித்து விட்டார் புஸ்ஸி ஆனந்த்.

புஸ்ஸி ஆனந்தின் பேச்சைக் கேட்டு தான் விஜய் நடந்து கொண்டுள்ளார். விஜய் சொந்தமாக யோசிப்பது இல்லை என்று எஸ். ஏ. சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளாராம்.

அதுமட்டுமின்றி, கட்சி தொடங்குவது தொடர்பான  அறிவிப்பையும் புஸ்ஸியின் அறிவுரையை கேட்டுக் கொண்டுதான் விஜய் தெரியப்படுத்தினாராம் என ரங்கநாதன் விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர், பயில்வான் எப்போதுமே வாயில் வந்ததை பேசுவார் என அவருக்கு கமெண்ட்  செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement