• Dec 08 2023

கவர்மென்ட் கான்ராக்ட் எடுக்கப்போன பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- கோபியுடன் சேர்ந்து நக்கலடிக்கும் ஈஸ்வரி- Baakiyalakshmi Serial

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கவர்மென்ட் கான்ராக்ட் எடுப்பதற்காக பாக்கியாவும் எழிலும் அந்த ஆபிஸிற்கு போய் நிற்கின்றனர். அப்போது அப்பிலிகேஷன் போர்முக்கு பத்தாயிரம் கட்ட சொல்ல பாக்கியா வீட்டு செலவுக்கு வைத்திருந்த பணத்தைக் கட்டுகின்றார்.


தொடர்ந்து கான்டாக்ட் கிடைத்திடும் தானே என்று இருக்க, அட்வான்ஸாக ஒரு லட்சம் இன்னும் கட்ட வேணும் என்று சொல்ல, பாக்கியா என்ன செய்வதென்று யோசிச்சுக் கொண்டு வெளியில் வருகின்றார்.பின்னர் பழனிச்சாமியும் அங்கு வர பாக்கியா நடந்ததைச் சொல்கின்றார்.

அப்போது பழனிச்சாமி ஒரு லட்சம் பணத்தை தான் தருகின்றேன் என்று சொல்ல, பாக்கியா வேணாம் என்கின்றார். அதற்கு பழனிச்சாமி கடனாக வாங்கிக்கோங்க என்கின்றார்.பாக்கியா இல்லை பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கின்றேன் என சமாளிக்கின்றார்.


பின்னர் வீட்டுக்கு வந்து தனது மாமனாரிடம் இது பற்றி சொல்லிக் கொண்டிருக்க மறுபுறம் கோபிக்கு சாப்பாடு பரிமாறுகின்றார் ஈஸ்வரி. அப்போது பாக்கியா சொல்லும் கதைகளை எல்லாம் கேட்டு ஈஸ்வரி திட்டுகின்றார்.


அடுத்து பணத்திற்கு என்ன செய்வதென்று யோசிச்சுக் கொண்டிருக்கும் பாக்கியா கான்டீன் பொருட்களை விற்க முடிவு செய்கின்றார். அத்தோடு தன்னுடன் வேலைக்கு நின்றவர்களைக் கூப்பிட்டு,இனிமேல் எல்லாம் சரி ஆகிடும் கான்ராக்ட் நமக்கு கிடைக்கும் என்று உறுதியாய் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஈஸ்வரி திட்டி விட்டு உள்ளே போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement