• Jan 16 2026

விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் புதிய திருப்பம்.. நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி மூலம் ஏற்கனவே பல வெற்றிப்படங்களை வழங்கியவர். ஆனால், தற்போது அவருக்கு நீதிமன்றத்தில் சட்டபூர்வமான ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. மகுடம் பட தயாரிப்பிற்காக எடுத்த கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, விஷால் பதிலளிக்க வேண்டும் என தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.


விஷால், தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல வருடங்களுக்கு முன்பு சினிமா பைனான்சியரான அன்புச்செழியனிடமிருந்து ரூ.21.29 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த தொகையை தயாரிப்பிற்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கான கட்டண விவரங்கள் முறையாக நடைபெறவில்லை என லைகா நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ், தமிழ் சினிமாவில் நன்கு அறியப்படும் நிறுவனம். இந்நிறுவனம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, விஷால் பிலிம் ஃபேக்டரிக்கு வழங்கப்பட்ட கடனுக்கான பணத்தை, அதனுடன் 30% வட்டி சேர்த்து, திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம், விஷால் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அவரால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய தொகை மற்றும் வட்டி விவரங்கள் மீண்டும் மதிப்பீடு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement