ரம்யா கிருஷ்ணன் தமிழிலும், தெலுங்கிலும் பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ் காலகட்டங்களில் சிறந்த கதாநாயகியாக நடித்தார். “படையப்பா” திரைப்படம் இவருக்கு தனி அடையாளமாக விளங்கியது.
இத்திரைப்படத்தில் கிளாமர் நாயகியாக மட்டுமல்லாமல், வில்லியாகவும் அவரின் திறமை வெளிப்பட்டது. ரசிகர்களையும் திரையுலகத்தையும் மயக்கும் வகையில் நடித்திருந்தார். இவரின் அந்த திறமை மற்றும் ஸ்டைல் அனைத்தும் அவரை ஒரு பிரச்சார நடிகையாக திகழவைத்தது.

“படையப்பா” திரைப்படம் ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு மைல்கல் சாதனையாக அமைந்தது. இதில் அவர் நடித்த கதாபாத்திரம் வில்லி என்ற தன்மையுடன் இருந்தாலும், அதில் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தது.
தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் இருந்தாலும், ரம்யா கிருஷ்ணன் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, மக்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பெற்றார். அவரது நடிப்பு திறமை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், மற்றும் ஸ்டைலிஷான வெளிப்பாடு அவரை தனியாக நிலைநிறுத்தியது.

அத்தகைய நடிகை தற்பொழுது படங்களில் இருந்து விலகியிருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படுகின்றார். இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். வைரலான வீடியோ இதோ.!
Listen News!