• Jan 07 2025

மீண்டும் களமிறங்கிய 8 வைல்ட் கார்ட் என்ட்ரிஸ்.?? யாருமே எதிர்பார்க்காத அதிரடி சம்பவம்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் வெற்றிகரமாக நிறைவுக்கு வரவுள்ளது. இம்முறை நடைபெற்ற டிக்கெட் டூ பினாலையே டாஸ்க்கில் ரயான் முதலாவது போட்டியாளராக நுழைந்திருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று வாரங்களாகவே டபுள் எடிஷன் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினாலே இவ்வாறு டபுள் எவிக்சன் நடைபெற்றது. இறுதியாக இந்த எவிக்ஷனில் மஞ்சரியும் ராணவும் எதிர்பாராத விதத்தில் எலிமினேட்டாகி வெளியே சென்றுள்ளார்கள்.

d_i_a

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் எட்டு போட்டியாளர்கள் காணப்படும் நிலையில், இவர்களில் டாப் 5 கண்டெஸ்டெண்ட்டாக யார் யார் பைனலுக்குள் நுழைய உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.


இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் கலந்துகொண்டு எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க உள்ளார்கள். அதிலும் எட்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


அந்த வகையில் ரவீந்தர், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா தியாகராஜன், சாச்சனா, சிவகுமார், வர்ஷினி வெங்கட் மற்றும் அர்ணவ் ஆகியோர் உள்ளே நுழைய உள்ளனராம். இவர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதால் என்ன நடக்கும்? என்ன மாற்றம் நிகழும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement