• Oct 16 2024

ஒன்னா நின்னு போட்டோ போட்டது ஒரு குற்றமா? மஞ்சு வாரியர் பிறந்த நாளில் நடந்தது?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக  வலம் வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுத்தாலும் அதன் பின்பு ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். தற்போது அழுத்த திருத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

மலையாள நடிகையான இவருக்கு, தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இவர் நடிக்கும் படங்களை தேடி தேடி பார்க்கும் அளவிற்கு இவர் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ளார்கள். 

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் தான் அசுரன். அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனாலும் அந்த படத்தில் வளர்ந்த மகனுக்கு அம்மாவாக நடித்திருப்பார். அதன் பின்பு வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பட்டையை கிளப்பி இருப்பார். இதில் அவர் 20 வயது பெண் போல் அவ்வளவு அழகாக இருப்பார்.


தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடலில் இவரது எக்ஸ்பிரஸ் ரஜினிகாந்த்தை  விட நன்றாக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மஞ்சு வாரியர் கடந்த 10ம் தேதி தனது 46வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு வேட்டையன் பட குழுவினரும் தமது சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இவ்வாறான நிலையில் மஞ்சு வாரியர் பிறந்த நாளன்று  இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் உடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.  அனுராக் காஷ்யப்புக்கும் அன்றைய தினம் தான் பிறந்தநாள். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலர் பல விதமாக பேசி வருகின்றார்கள்.

ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார் அனுராக். அதேபோல மஞ்சு வாரியர் ஒரு திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. தற்போது இவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை வைத்து பலவாறு கமெண்ட் செய்து வருகின்றார்கள் இணையவாசிகள்.

Advertisement