• May 21 2024

திடீரென முடிவுக்கு வந்த ஜீ தமிழ் சீரலியல்…அட அதுக்குள்ளேயேயா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் இரண்டு புது சீரியல்கள் வர இருக்கிறது. மேலும் அந்த இரண்டு தொடர்களையும் ப்ரைம் டைமில் தான் கொண்டு வர இருக்கின்றனர் என கூறப்பபடுகின்றது.

இந்நிலையில் தற்போது இரண்டு புது சீரியல்களுக்கும் நேரம் ஒதுக்குவதற்காக அன்பே சிவம் தொடர் திடீரென முடிவுக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் கடந்த வருட இறுதியில் தான் அன்பே சிவம் சீரியல் ஒளிபரப்பை தொடங்கியது. விவாகரத்து ஆன ஹீரோயின், அவரை போலவே விவாகரத்து ஆன ஹீரோ.. இருவருக்கும் நடுவில் தான் கதை.. என ஆரம்பத்திலேயே கவனம் ஈர்த்த சீரியல் தான் அன்பே சிவம் சீரியல்.

அன்பே சிவம் தொடரில் முதலில் நடிக்க தொடங்கிய ரக்ஷா ஹொல்லா திடீரென நீக்கப்பட்டார். மேலும் அவர் உடல் எடை அதிகரித்து திரையில் குண்டாக தெரிந்ததால் தான் நீக்கப்பட்டார் என செய்தி தீயாய் பரவியது. அதற்கு பின்னர் சில நடிகர்களும் இந்த சீரியலில் மாற்றப்பட்டனர்.

மேலும் 2021ல் அக்டோபர் 18 தொடங்கியா இந்த தொடர் தற்போது 214 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில் அடுத்த வாரத்தோடு முடிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement