• Jan 19 2025

விடுதலை 2 விரைவில் ரிலீஸ் சூரி தெரிவிப்பு ! இளையராஜா பிரச்சனை தீர்வென்ன செய்தியாளர் கேள்வி !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு மார்ச் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது விடுதலை திரைப்படம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கயநாயகனாக களமிறங்கிய இத் திரைப்படம் விஜய் சேதுபதி , பவானி ஸ்ரீ , கௌதம் வாசுதேவ் மேனன் , ராஜீவ் மேனன் , இளவரசு , பாலாஜி சக்திவேல் , சரவண சுப்பையா , சேத்தன் , மூணார் ரமேஷ் , மற்றும் பாவெல் நவகீதன் என பெரும் நட்ச்சத்திர பட்டாளத்தை கொண்டது என்றால் மிகையாகாது.


விடுதலை பகுதி ஒன்றின் தொடர் திரைக்கதையுடன் விடுதலை பகுதி 2 என்ற தலைப்பில் 2024 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பொன்றில் நடிகர் சூரி "விடுதலை 2 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வெளியாகலாம்" என செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.


இளையராஜா இசையில் விடுதலை படம் வெளியாக இருப்பதனால் செய்தியாளர் தற்போது இளையராஜா வைரமுத்து பற்றிய கேள்வியெழுப்ப "இருவரும் ஒருவருக்கொருவர் சரியான பதில்கள் தந்து வருகின்றனர்" பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் என சூரி பதிலளித்தார்.

Advertisement

Advertisement