• Jan 19 2025

அஜித்துக்கு போட்டியாக களமிறங்கிய ஹிப் ஹாப் தமிழா ஆதி.. அஜித்துக்கு முன் சாதனை செய்வாரா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக் கொண்டும், இன்னொரு பக்கம் பைக்கில் உலகச் பயணம் செய்து வருகிறார் என்பதும் அவர் கிட்டத்தட்ட பாதி உலக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்ட நிலையில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களை முடித்துவிட்டு மீதமுள்ள பகுதிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித்துக்கு போட்டியாக ஹிப் ஹாப் தமிழா ஆதியும் உலக சுற்றுப்பயணம் செய்யப் போவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான ’பிடி சார்’ என்ற திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜன், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.  ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படம் குறித்த குறித்து ஹிப்ஹாப் தமிழா கூறியபோது ’ஒரு பள்ளியில் பிடி சார் என்பது மிகவும் முக்கியமான பதவி, மாணவர்களின் ஒழுக்கத்தை பார்த்துக் கொள்வது அவருடைய வேலை, அப்படி ஒரு பிடி சாராக இந்த படத்தில் நடித்துள்ளேன், இந்த படத்தில் மாணவர்களுக்கு பாசிட்டிவான சில விஷயங்களை சொல்லி உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வருட இறுதியில் உலகம் முழுவதும் டூர் செல்ல இருப்பதாகவும் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஏஆர் ரகுமான், இளையராஜா, இமான் உள்பட பல இசையமைப்பாளர்கள் உலகின் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதியும் அந்த வரிசையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ஒரு பக்கம் பைக்கில் உலக சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் ஆதி இசை நிகழ்ச்சிக்காக உலக சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இதில் யார் முதலில் தங்கள் சுற்றுப்பயணத்தை முடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement