உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் திடீரென கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ ‘இந்தியன் 3’ ’தக்லைஃப்’ மற்றும் ’கல்கி 2898 ஏடி’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்த ’கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்திருப்பதாகவும் வெறும் பத்து நிமிடமே அவரது காட்சி இருந்தாலும் மிரட்டலாக இருக்கும் வகையில் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் தொடர்ச்சியாக 5 பாகங்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும் அதில் மூன்று பாகங்கள் பாகங்களில் கமல்ஹாசனின் கேரக்டர் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தற்போது இணைந்துள்ளார். இந்த படத்தின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பிரபாஸின் நண்பராக ஒரு ரோபோ நடித்துள்ளதாகவும் அந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் தான் குரல் கொடுத்துள்ளதாகவும் அவரது குரல் ரோபோவுக்கு மிகச் சிறப்பாக புரிந்து இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து பிரபாஸ், கமல்ஹாசன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Listen News!