• May 04 2024

பேக் இன்ஸ்டா ஐடியில் இருந்து போஸ்ட் போட்ட சின்மயி- ஷாக்கான ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள். சிலரது குரலை மக்களால் மறக்கவே முடியாது.அப்படிபட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி.

ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.இவர் பாடிய எல்லா பாடல்களும் செம ஹிட், எத்தனை முறை இவரது பாடலை கேட்டாலும் சுகமாக இருக்கும்.

அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் அவர்.

சின்மயி 2013ம் ஆண்டு முதல் நடிகர் ராகுல் என்பவரை காதலித்து வந்தார். இதன் பின் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்நிலையில் தற்போது சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. ஒரு நாள் முன்பு தான் சின்மயி தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவித்து இருந்தார். அவர் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றார் என பரவிய செய்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

மேலும் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே அவரது இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. அவர் பல ஆண்கள் தனக்கு இன்ஸ்டா DMல் தகாத புகைப்படங்களை அனுப்புகிறார்கள் என புகார் கூறி இருந்தார்.

அப்படி மெசேஜ் அனுப்பியவர்களை விட்டுவிட்டு தனது கணக்கை நீக்கிவிட்டார்கள் என தனது பேக் இன்ஸ்டா ஐடியில் இருந்து பதிவிட்டு இருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement