• Jan 19 2025

ஊருக்கு ஒரு இலவச வழக்கறிஞர்! அரசியல் பணியை ஆரம்பித்த விஜய்! என்ன செய்தார் தெரியுமா?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மாத்திரமே உச்ச நட்சத்திரங்களாக இருந்து பின்னர் அரசியலில் இறங்குகின்றனர் அவ்வாறு இருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் செய்ய இருக்கும் செயல் குறித்து கிடைத்துள்ள தகவல்கள் சமீபத்திய அரசியல்வாதிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .


தமிழ் சினிமாவின் தளபதி என அழைக்கப்படும் விஜய் தவிர்க்கமுடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்தாலும் அவர் சமீபத்தில் இன்னும் இரண்டு படங்களோடு சினிமாவை விட்டு விளகப்போவதாகவும் அரசியலில் இறங்கப்போவதாகவும் கூறியிருந்த நிலையில் சமீபத்தில் ஒரு அரசியல் பணியை செய்துள்ளார்.


மக்களுக்கு சட்டஉதவி வழங்க காவல்நிலையங்களை கணக்கிட்டு தலா 2 வழக்கறிஞர்களை நியமிக்க விஜய் திட்டம் போட்டுள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வரும் நிலையில் காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு த.வெ.க வழக்கறிஞர்கள் சட்ட உதவிகளை வழங்குவார்கள் என்றும்  வழக்கறிஞர்கள் நியமனத்தை இந்த வாரத்திற்குள் முடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது. 

Advertisement

Advertisement