• May 05 2024

மீண்டும் உருவாகும் தேவர் மகன்-2.. சந்தோஷத்தில் ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3இல் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் அள்ளிக் குவித்து வருகின்றது விக்ரம் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில்,காளிதாஸ் ஜெயராம் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தனர்.

இத்திரைப்படம் வெளியாகி 21 நாட்களை கடந்த நிலையில் 380 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளது.

அதே சந்தோசத்துடன் தற்போது தேவர்மகன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரதன் இயக்கத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கௌதமி, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் தேவர்மகன்.

இத் திரைப்படம் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த இந்த படம் ஏராளமான விருதுகளை வாங்கின.

அந்தவகையில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் கமல்ஹாசன். இந்த 2-ஆம் பாகம் கமல் மற்றும் நாசர் மகன்களுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பந்தமான கதையில் உருவாகிறது.

அந்த வகையில் முதல் பாகத்தில் சிவாஜிகணேசன் அப்பாவாக நடித்தது போன்று இந்த படத்தில் கமல்ஹாசன் அப்பாவாக நடிக்க போகிறார் அவரது மகனாக விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த நாசரின் மகனாக நடிக்கிறார், என்று சில தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றது. இப்படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement