• Jul 27 2024

தேசிய விருது வாங்கிய நடிகையை வளைத்து போட்ட விஜய்.. ‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக அவர் விரைவில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இயக்குநர் எச் வினோத் ’தளபதி 69’ படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியை முடித்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் களமிறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

முதல் கட்டமாக இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க அவர் அபர்ணா பாலமுரளியை தேர்வு செய்திருப்பதாகவும் அவர்தான் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அபர்ணா பாலமுரளி, சூர்யா நடித்த ’சூரரை போற்று’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் என்பதும் அது மட்டும் இன்றி தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் ’ராயன்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தமிழில் ’8 தோட்டாக்கள்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’சர்வம் தாள மயம்’ ’தீதும் நன்றும்’ ’வீட்ல விசேஷம்’ ’நித்தம் ஒரு வானம்’ போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் ’தளபதி 69 ’ படத்திலும் நடிக்க உள்ளார்.

Advertisement

Advertisement